இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது 5 பேர் இல்லையாம்... 8 பாதிரியார்களாம்! ; திடுக்கிடும் தகவல்

 
Published : Jun 28, 2018, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது 5 பேர் இல்லையாம்... 8 பாதிரியார்களாம்! ; திடுக்கிடும் தகவல்

சுருக்கம்

Scandal Rocks Kerala Orthodox ChurchAs Five Priests Face Allegation Of Sexually Exploiting

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு  தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவர்  திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். 

கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராய்.  துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன்பு தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் மெர்சியை பலமுறை பலாத்காரம்  செய்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபையின் கீழ் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், முன்பு நடந்த  சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு கேட்டேன். 

இதை அறிந்த பாதிரியார் கணவரிடம் சம்பவத்தை கூறுவேன் என்று மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோவை காட்டி மிரட்டி மேலும் 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.  

இது ராய்க்கு தெரிய வந்தது. இது  குறித்து அவர், மலங்கரை கத்தோலிக்க சபை பிஷப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ்,  ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் ஆகிய 5  பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால்  மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது என அவரது கணவர் கூறியுள்ளார்.  பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்