திருநங்கைகள் படிப்புக்கு கேரள அரசு புது திட்டம்...!

First Published Jun 28, 2018, 11:45 AM IST
Highlights
Kerala new project for transgender


மூன்றாம் பாலினத்தவர்கள், கல்வி கற்பதற்கு ஏதுவாக, கேரள அரசு சமன்வாயா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்களுக்கு இலவச தங்கும்
வசதியுடன் உணவு வழங்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு தங்குவதற்கு கூட பிரச்சனை எழுந்துள்ளது. அவர்களுக்கு வாடகை வீடு மற்றும் விடுதிகள் கிடைப்பதில் அனுமதி மறுக்கப்படுகிறது. 

இதனால் அவர்கள் முறையான வாழ்க்கைபை பாதை அமைத்துக் கொள்ள போராடி வருகின்றனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக, மத்திய பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தொலைதூர மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகம் இலவச கல்வி அளித்து வருகிறது. 

மூன்றாம் பாலினத்தவர்கள் சுயமாக தொழில்புரிய அரசும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது. ஆனாலும், முறையான கல்வி அவர்களுக்கு
கிடைப்பதில்லை.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக சமன்வாயா என்ற புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் சேர்ந்து படிக்கும் திருநங்கைகளுக்கு, இலவச உணவுடன் தங்கும் விடுதி வசதி அமைத்து தரப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரள மாநில எழுத்தறிவு திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகாலா கூறுகையில், சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை உருவாகிறது. 

அதனால், மூன்றாம் பாலினத்தவர்களை சமூகத்தில் உயர்ந்த சமன்வாயா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்கும்
மாணவர்களுக்கு இலவசஉணவு மற்றும் தங்கும் விடுதி அமைத்து தரப்படும.

4 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்க மாதம் ரூ.1000, 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்க
மாதம் ரூ1250 உதவி தொகை வழங்கப்படும். அவட்ரகளுக்காக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கும்
விடுதிகள் அமைக்கப்படும என்றார்.

click me!