உக்ரனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உக்ரனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்தது. இதன் காரணமாக உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் நாடு திரும்பினர். இவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறைக்கான மக்களவை குழு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 14,500 பள்ளிகளுக்கு பிரதமர் மோடி புதிய அறிவிப்பு; தேசியக் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம்!!
ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: மரணத்திற்கு சென்ற இருதய நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்; வைரலாகும் வீடியோ!!
அப்போது மனுதாரர் தரப்பில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் படிப்பை தொடர வெளியுறவு துறைக்கான மக்களவைக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையம் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.