7 விநாடிகள் மரணத்திற்கு சென்றவரை காப்பாற்றிய மருத்துவர்; வைரலாகும் வீடியோ!!

By Raghupati RFirst Published Sep 5, 2022, 5:43 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் மருத்துவர் முன்பு அமர்ந்து இருந்த நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது.  விரைந்து செயல்பட்ட மருத்துவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்றினார். 

கோலாப்பூரில் பிரபல இருதய நோய் மருத்துவராக இருப்பவர் அர்ஜூன் அத்நாயக். இவரிடம் மருத்துவத்திற்கு வந்து இருந்த நோயாளி ஒருவர் அமர்ந்து இருக்கும்போதே, சுயநினைவின்றி, இருக்கையில் சாய்ந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் அர்ஜூன் ஓடிச் சென்று நோயாளியின் மார்பில் குத்தினார்.

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் பதவி டார்கெட்.! பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய ஸ்டாலின் - ராகுல் காந்தி” மாஸ்டர் பிளான் எடுபடுமா ?

இதில் நோயாளியின் இருதயம் மீண்டும் செயல்படத் துவங்கியது. நோயாளியும் சில நொடிகளில் மரண படுக்கைக்கு சென்று திரும்பினார்.  நோயாளிக்கு மருத்துவர் கொடுத்த சிகிச்சை ஆங்கிலத்தில் சிபிஆர் எனப்படுகிறது. நோயாளிக்கு அருகில் அமர்ந்து இருந்தவரும் நொடியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மருத்துவர் விரைந்து செயல்படுவதற்கு வழிவிட்டார். சில நொடிகளில் தலையை சாய்த்த நோயாளி மீண்டு வந்தார். 

This video shows an example of a real life hero living in our midst. Dr. Arjun Adnaik, one of the best cardiologists, from Kolhapur saving a patient's life. I applaud such honourable and virtuous heroes. pic.twitter.com/Gd9U2ubldJ

— Dhananjay Mahadik (@dbmahadik)

மருத்துவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மருத்துவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். முதல் உதவி சிகிச்சையை பள்ளி பாடங்களில் வைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். பாஜக எம்பி தனஞ்செய் மஹாதியும் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. குடிநீர் விநியோகம் ரத்து.. பொதுமக்கள் கதி என்னவாகும் ?

click me!