அதானி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த கேரளா அரசு - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Raghupati RFirst Published Oct 17, 2022, 6:24 PM IST
Highlights

அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி நிறுவனம்:

மும்பை, டெல்லி, லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய ஏழு நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் முடிவை மத்திய அரசு எடுத்தது. அதன்படி, பொதுத்துறை, தனியார் கூட்டு அடிப்படையில் விமான நிலையப் பராமரிப்புக் குத்தகை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையம்:

இதில், டெல்லி தவிர்த்து மற்ற ஏழு விமான நிலையங்களின் பராமரிப்பு பணி அதானி குழுமத்திடம் உள்ளது. இதனிடையே, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை எதிர்த்து கேரள அரசு மற்றும் கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

உச்ச நீதிமன்றம்:

இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் சிஎஸ் டயஸ் ஆகியோர் தெரிவித்தனர். முன்மொழிவுக்கான கோரிக்கையில் (RFP) பல உட்பிரிவுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை என்று கேரள அரசு கூறியது. ஆனால் நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்தது.

டெண்டர் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், மாநிலத்தின் கோரிக்கையின் பேரில் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு  சிறப்புப் பயன் அளிக்கப்பட்டதாகவும் மையம் கூறியது. அதானி நிறுவனத்தை எதிர்த்த கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

click me!