குழந்தை பெற்றுக்கொள்ள கணவனை வெளிய விடுங்க.. கதறிய மனைவி.. பாலியல் கைதியை பரோலில் விட்ட நீதிமன்றம்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 17, 2022, 5:36 PM IST

மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பலாத்கார வழக்கு குற்றவாளிக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பலாத்கார வழக்கு குற்றவாளிக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

உச்சநீதிமன்றம் சில வழக்குகளில் மனிதாபிமான அடிப்படையில் சில பரபரப்பு தீர்ப்புகளை வழங்குவதுண்டு. அது பலரையும் ஆசிரியர் படுத்துவது வழக்கம், ஆனால் தற்போது பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய கைதிக்கு அவரது மனைவியுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  குற்றவாளியின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில்  நீதிமன்றம் அக்குற்றவாளிக்கு இக்கருணை காட்டி உள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்:  மக்களே அலர்ட் !!! நாளை இந்த பகுதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

இந்நிலையில் அந்த குற்றவாளி 15 நாட்கள் மனைவியுடன் சேர்ந்துவாழ பரோலில் விடுவிக்கப்பட இருக்கிறார். மேலும் நீதி மன்றம் சில நிபந்தனைகளையும் அந்த நபருக்கு விதித்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராகுல், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அக்குற்றத்திற்காக அவர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. அதில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளி  ராகுல் சிறையில் இருந்து வருகிறார். 

இதையும் படியுங்கள்: குஜராத்தில் PMJAY-MA யோஜனா ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம்... தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

அவர் சிறையில் இருப்பதால் அவரது மனைவி கணவர் ராகுலுக்கு பரோல் வழங்கக்கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  தனது பரம்பரைக்கு வாரிசு வேண்டும் என்பதனாலும், தனக்கு குழந்தை தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ள அவர்,சிறையிலுள்ள தனது கணவரை 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 15 நாட்கள் ராகுலுக்கு பரோல் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி தலா 1 லட்சம் மதிப்பிலான இரண்டு ஜாமீன் பத்திரங்களையும், 2 லட்சத்துக்கான தனிப்பட்ட ஜாமினும் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் சந்திப் மேதா, நீதிபதி சமீர் ஜெயின் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனிதாபிமான கண்ணோட்டத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவரது மனைவி குழந்தை பெற விரும்புவதால், கணவன் இல்லாததால் குழந்தை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். நிலையில் அதை பரிசீலித்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

 

click me!