பணிபுரியும் பெண்கள், மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுப்பு கோரும் மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

Published : Feb 24, 2023, 03:36 PM ISTUpdated : Feb 24, 2023, 03:37 PM IST
பணிபுரியும் பெண்கள், மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுப்பு கோரும் மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சுருக்கம்

பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நலக்கோளாறுக்காக விடுமுறை அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நலக்கோளாறுக்காக விடுமுறை அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர், தனது வழக்கறிஞர் விஷார் திவாரி மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

மகப்பேறு நலச்சட்ட் 1961ன் கீழ், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகளுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளுக்காக விடுமுறை அளி்க்க மாநில அரசுக்கு விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். பிரிவு 14ன்படி, இதற்காக தனி ஆய்வாளரை நியமித்து விடுமுறை முறையாக விடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கலாம், நடைமுறைப்படுத்தலாம்.

கொரோனா காலத்தில் 34 லட்சம் பேரை காப்பாற்றிய மோடி அரசு| ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

பிரி்ட்டன், சீனா, வேல்ஸ், ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென் கொரியா, ஸ்பெயின், ஜாம்பியா நாடுகளில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது 

 பெண்கள் மட்டுமே மனித இனத்தை தங்களின் சிறப்பான படைப்பாற்றல் மூலம் பரப்புவதற்கு அதிகாரம் பெற்றவர்கள். மகப்பேறு காலத்தின் பல்வேறு கட்டங்களில், மாதவிடாய், கர்ப்பம், கருச்சிதைவு அல்லது அது தொடர்பான மருத்துவச் சிக்கல்கள் என பல உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்

 1961, மகப்பேறு நலச்சட்டம் பெண்களின் வேதனைகளைப் புரிந்து கொண்டு அவர்களின் மகப்பேறு காலத்தில் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை வழங்குகிறது. சில நேரங்களில் கருச்சிதைவு, அறுவைசிகிச்சை போன்ற மருத்துவக் காரணங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. பெண்களையும், தாய்மையையும் மதித்து, மகப்பேறு காலத்தில் விடுமுறை வழங்கிய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. 

இன்று பல தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு அமைப்புகளில் கூட பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை. மகப்பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தச் சிறந்த சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன, மேலும் விதிகளை உருவாக்கும்போது விடுப்பு விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ராய்பூர் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு| சோனியா, ராகுல் செயற்குழுவில் பங்கேற்கவில்லை

மத்திய சிவில் பணியில் இருப்போருக்கு தங்களின் இரு குழந்தைகள் 18வயது அடையும் வரை, குழந்தைப் பராமரிப்பு விடுமுறையாக 730 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. 

இதேபோல ஆண்களுக்கும் தங்கள் குழந்தையைப் பாரமரிக்க அவர்களின் மனைவி மகப்பேறு காலத்தில் 15 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களின் உரிமைகள், பிரச்சினைகளை அங்கீகரிக்க வேண்டும். பீகார் மாநிலத்தில் மட்டும் 1992ல் இருந்து 2 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, பி நரசிம்மா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் “ மனுதாரர் அவரின் கோரிக்கையை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிடலாம். கொள்கை தொடர்பான முடிவுகளை நீதிமன்றம் கவனிக்காது.

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினால், அவர்களை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதை நிறுத்ததூண்டிவிடும். இது கொள்கை ரீதியான மனு என்பதால், அமைச்சகத்திடம் முறையிடலாம்” எனத் தெரிவித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!