நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்களிடத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாகக் கொண்டு சென்றதால், கொரோனாவில் 34 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசியை மக்களிடத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாகக் கொண்டு சென்றதால், கொரோனாவில் 34 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், இன்ஸ்ட்டியூட் ஃபார் காம்படீட்டிவ்நெஸ் ஆகியவை இணைந்து கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தியது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்த முறை மற்றும் கட்டுப்படுத்திய முறை ஆகியவற்றை இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மேலிருந்து கீழ் அணுகுமுறைக்கு எதிராக, கீழிருந்து மேல் அணுகுமுறை முக்கியமானது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் ஆன்லைன் மருந்து வர்த்தகத்தில் கோலோச்சும் சீனா; பிடியை இறுக்க மத்திய அரசு திட்டம்!!
இந்த அறிக்கை முக்கியமாகக் குறிப்பிடுவது என்னவெனவில், கொரோனா காலத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க, கிராமங்கள் அளவில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை கண்காணித்தல், மக்களுக்கு கொரோனா பரிசோதனை, வீட்டில் தனிமைப்படுத்துதல், தேவையான அடிப்படை மருத்துவ உபகரனங்கள் அளித்தல், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கியது.
சுகாதார உள்கட்டமைப்பை மறுசீரமைத்தல் மற்றும் மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நிலையான ஒருங்கிணைப்பு ஆகியவை வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவியது
கோவாக்ஸின் மற்றம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து தேசம் போராட உதவியாக இருந்தன. இந்த தடுப்பூசியை கோடிக்கணக்கானமக்கள் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் அதனால் சுகாதாரத்துறைக்கான அழுத்தமும் குறைந்தது.
“பொருளாதாரத்தை சரிசெய்தல்: இந்தியாவின் தடுப்பூசி மற்றும் தொடர்புடைய சிக்கல்களில் பொருளாதார தாக்க மதிப்பீடு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று டெல்லியில் வெளியிட்டார். அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று நோயை, கடந்த 2020, ஜனவரி மாதத்தில் உலக சுகதார அமைப்பு, சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. தொற்றுநோய் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்களில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
ராய்பூர் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு| சோனியா, ராகுல் செயற்குழுவில் பங்கேற்கவில்லை
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா, முழுமையான அரசு, முழுமையான சமூகம் என்ற நோக்கில் செயல்பட்டதால், கொரோனா பெருந்தொற்றை திறம்பட நிர்வகிப்பதற்கான ஒரு முழுமையான பதில் உத்தியை ஏற்றுக்கொண்டது
3 நடவடிக்கைகள்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 3 முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்தது
1. கட்டுப்படுத்துதல்
2. நிவாரண உதவிகள்
3. தடுப்பூசி செலுத்துதல்
இந்த 3 முயற்சிகளும்தான் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க உதவியது. வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் பொருளாதார நடவடிக்கைகளை உறுதி செய்வதிலும் இந்த 3 நடவடிக்கைகளும் முக்கியமானவை.
34 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன
இந்தியா முழுவதும் மோடி அரசு தடுப்பூசி திட்டத்தைக் கொண்டு சென்று, மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொண்டு சென்றதால் 34லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
18,300 கோடி டாலர்கள்
தடூப்பூசி முகாம்களால், எப்போதும் உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன, அது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் 18300 கோடி டாலர் இழப்பையும் இந்த தடுப்பூசி முகாம்கள் குறைத்துள்ளன. முறைப்படி தடுப்பூசி செலுத்தி மக்களைக் காப்பாற்றியதால்,பொருளாதாரத்துக்கு 15420 டாலர் பலன் கிடைத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க விரைவாகவே லாக்டவுன் நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 தடுப்பு வழிகளையும் அரசு செயல்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தியது.
மோடி ஒரு சிறந்த மனிதர் என பாகிஸ்தானியர் ஒருவர் புகழாரம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மருத்துவக் கட்டமைப்பு
கொரோனா காலத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளில் அதிகமாக அரசு கவனம் செலுத்தியது. கொரோனாசிகிச்சை வார்டுகள்,படுக்கைகள், மருந்துகள், போக்குவரத்து வசதிகள், என்95 முகக்கவசம், பிபிஇ கிட்ஸ், மருத்துவ ஆக்சிஜன், ஆகியவை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இது தவிர டிஜிட்டல் முறையில் மருத்துவ ஆலோசனைகள், இசஞ்சீவானி தொலைமருத்துவம், ஆரோக்கியசேது போன்ற செயலிகளும் கொண்டுவரப்பட்டன
கொரோனா பரிசோதனைக்காகவும் கட்டமைப்புவசதிகள் உருவாக்கப்பட்டன, கொரோனா காலத்தில் 91.78 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டன. புதிதாக 52 ஆய்வுக்கூடங்கள், மரபணு பிரசோதனைமையங்கள் உருவாக்கப்பட்டன.
எல்ஐசிக்கு முதல்முறையாக இழப்பு| அதானி குழும பங்குகளில் முதலீட்டின் மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
தடுப்பூசி முகாம்
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி முகாமை இந்தியா செயல்படுத்தியது. முதல் டோஸ் தடுப்பூசியை 97 சதவீதம் மக்கள் செலுத்தினர், 2வது டோஸ் தடுப்பூசியை 90 சதவீதம் பேரும் செலுத்தினர். 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் தகுதிவாய்ந்தவர்களுக்கு செலுத்தப்பட்டது. அனைத்து மக்களும் இலவசமாக அரசின் சார்பில் தடுப்பூசி வழங்கப்பட்டது.
சமூக்தில் விளம்புநிலையில் உள்ள மக்களுக்கு கொரோனா காலத்தில் அரசு பல நிவாரண உதவிகளை வழங்கியது. முதியோர், விவசாயிகள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், பெண்கள், தொழில்முனைவோர் ஆகியோரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு பல உதவிகளை வழங்கியது.
இந்தத் திட்டத்தால், 1.28 கோடி சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் பயன்பெற்றன, இதன் காரணமாக, இந்தியப் பொருளாதாரத்துக்கு 10026 கோடி டாலர் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது. இது ஜிடிபியில் 4.90%
இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார்