வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தியது; நாகாலாந்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!!!

Published : Feb 24, 2023, 11:56 AM ISTUpdated : Feb 24, 2023, 12:45 PM IST
வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தியது; நாகாலாந்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!!!

சுருக்கம்

டெல்லியில் இருந்து நாகாலாந்து மாநிலத்தை காங்கிரஸ் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்சி செய்து வந்தது. வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது என்று பிரதமர் மோடி இன்று நாகாலாந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சரமாரியாக குற்றம்சாட்டினார். 

நாகாலாந்து மாநிலத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை  முன்னிட்டு இன்று சுமௌகெடிமா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த மாநிலத்தின் பாரம்பரிய ஆடையை அணிந்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ''நாகாலாந்து மாநிலத்திற்கான பாஜகவின் விருப்பமாக இருப்பது அமைதி, வளர்ச்சி, வளமை  என்பதுதான். மக்களிடம் பாஜகவின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஊழலை பாஜக ஒழித்துள்ளது. பிரதமர் கிஷான் சமன் நிதி திட்டத்தின் மூலம் மக்களுக்கு நேரடியாக தங்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வருகிறது.

டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் நாகாலாந்து மாநிலத்தை கண்டுகொள்ளவில்லை. அதன் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கு, வளமைக்கு, நிலையான பொருளாதாரத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. டெல்லியில் இருந்து திமாபூர் வரைக்கும் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்துள்ளது.

Congress session ராய்பூர் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு| சோனியா, ராகுல் செயற்குழுவில் பங்கேற்கவில்லை

இன்று நாகாலாந்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது. இதற்குக் காரணம் காங்கிரஸ் போன்று எட்டு வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் ஏடிஎம் போல் கருதவில்லை. எங்களுக்கு இந்த எட்டு மாநிலங்களும் அஷ்ட லட்சுமியைப் போன்றது. 

கோஹிமாவிற்கு ரயில் வசதிகள் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. நாகாலாந்து இளைஞர்களுக்கு சுற்றுலாவில் இருந்து தொழில்நுட்பம், விளையாட்டில் இருந்து தொழில்முனைவோர் என அனைத்து துறைகளிலும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. திரிபுராவில் வன்முறையற்ற தேர்தல்  நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய மக்களை பாராட்டுகிறேன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் வன்முறையற்ற தேர்தலை திரிபுரா சந்தித்து இருக்கிறது. இது எதனால் என்றால், பாஜக ஆட்சியால்தான்'' என்றார்.

கடந்த வாரங்களில் நாகாலாந்து மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இருவரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தனர். பாஜக - என்டிபிபி கட்சிகள் இணைந்து 60 இடங்களைக் கொண்ட சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!