SBI PO Final Result 2023: ஸ்டேட் வங்கி பி.ஓ. தேர்வு முடிவுகள் வெளியீடு; உடனே டவுன்லோட் பண்ணுங்க!

By SG Balan  |  First Published Apr 18, 2023, 8:16 PM IST

ஸ்பிஐ பிஓ (Probationary Officer) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வின் இறுதி முடிவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


ஸ்பிஐ பிஓ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வின் இறுதி முடிவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது. ப்ரோபேஷனரி ஆபீசர் (Probationary Officer) பணிக்கான இந்தத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். .

2023ஆம் ஆண்டுக்கான ஸ்பிஐ பிஓ தேர்வு (SBI PO Exam) முதல்நிலை நேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக நடத்தப்பட்டது. கடைசிச் சுற்றாக, நேர்காணல் / உளவியல் தேர்வு இந்த மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. எஸ்பிஐ பிஓ தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று PDF வடிவத்தில் டவுன்லோட் செய்யலாம்.

Tap to resize

Latest Videos

Download: SBI PO Final Result 2023

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 1673 ப்ரோபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணியிடங்களை நிரப்புகிறது. இத்தேர்வு குறித்த மேலதிக விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் ஸ்டேட் வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் தொடர்ந்து பார்த்துவரலாம்.

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

click me!