இனி ஏடிஎம்ல ஒரு நாளைக்கு இவ்வளவு தான் எடுக்க முடியும் !! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ வங்கி !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 1:44 PM IST
Highlights

ஸ்டேட் பாங்க் ஏடிஎம்களில் இனி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம்  ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதோ அப்போதிருந்து ஏடிஎம்களில் பிரச்சனை, பணத்தட்டுப்பாடு என பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுல்லாமல் வங்கிகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு பொது மக்களையும், வாடிக்கையாளர்களையும் குழப்பி வருகிறது. வங்கி பக்கமே இனி போக போவதில்லை எனும் அளவுக்கு வங்கிகள் வாடிக்கையாளக்ளுக்கு டார்ச்சர் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில்  நாள் ஒன்றிற்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.20,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 31 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

மோசடிகளை தடுப்பதற்காக ஏடிஎம்.,களில் பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்.,யில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000 ஆக இருந்து வருகிறது.

 அண்மைக்காலமாக ஏடிஎம்.,களில் இருந்து பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் வருவதாலும், ரொக்க பணம் இல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை குறைத்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

click me!