சபரிமலையில் பெண்களுக்கு 100 ஹெக்டர் நிலம்...! தேவாசம் போர்டு தகவல்!

Published : Oct 01, 2018, 01:02 PM IST
சபரிமலையில் பெண்களுக்கு 100 ஹெக்டர் நிலம்...! தேவாசம் போர்டு தகவல்!

சுருக்கம்

சபரிமலை வரும் பெண்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை வரும் பெண்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். 

சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 

இந்நிலையில், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில், பெண்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

அதற்காக, 100 ஹெக்டர் நிலத்தை ஒதுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி தந்ததாக கூறிய அவர், நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சபரிமலைக்கு பெண்கள் பெருமளவில் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தக்கல் செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும், அக்டோபர் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!