வங்கிக் கணக்கை குளோஸ்  பண்ணினால்  ரூ.575 அபராதம்…வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அதிர்ச்சி

 
Published : Apr 06, 2017, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
வங்கிக் கணக்கை குளோஸ்  பண்ணினால்  ரூ.575 அபராதம்…வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அதிர்ச்சி

சுருக்கம்

SBI atracity

வங்கிக் கணக்கை குளோஸ்  பண்ணினால்  ரூ.575 அபராதம்…வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அதிர்ச்சி

வங்கிக்  கணக்கை முடித்துக் கொள்ள, எஸ்பிஐ வங்கியில் 575 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களியே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைத்திருக்க வேண்டிய குறைந்த அளவு இருப்புத் தொகை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை அண்மையில் உயர்த்தியது. அதன்படி, மாநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக  5,000 ரூபாயும், நகரங்களில்  3,000 ரூபாயும்,  சிறிய நகரங்களில், 2,000ரூபாயும் கிராமங்களில், 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வரம்பை மீறுபவர்களுக்கு அதற்கேற்ப  அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயின் இந்த கடும் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், பலர், தங்கள் வங்கிக் கணக்குகளை குளோஸ் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, வங்கியை அணுகி அக்கௌட்ண்டை குளோஸ் பண்ணினால் அதற்காக  575 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல்  நடப்புக் கணக்கை குளோஸ் பண்ணுவதாக இருந்தால், 1,000 ரூபாய்க்கு மேல், கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகிறார்கள்.  இது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!