இன்று முதல் நடைமுறைக்கு வந்த SBI வங்கியின் ‘அதிர்ச்சிக்குரிய புதிய கட்டணங்கள்’ என்ன தெரியுமா?

First Published Jun 1, 2017, 6:02 PM IST
Highlights
SBI ATM online cash transaction fees change from June 1 All you need to know


நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அறிவித்த புதிய கட்டணங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

எஸ்.பி.ஐ. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு மாதம் குறைந்தபட்ச இருப்பு ரூ. 5 ஆயிரம் இருக்க வேண்டும் என விதிமுறை நடைமுறையில் இருக்கிறது. 

இந்நிலையில் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் எண்ணிக்கைகள், பரிமாற்ற கட்டணம், காசோலைக்கு கட்டணம் ஆகியவற்றை மாற்றி கடந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறைகள் ஜூன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

1. இந்த புதிய விதிமுறையின்படி எஸ்.பி.ஐ. வங்கியின் ‘மொபைல் வாலட் ஆப்ஸ்’ மூலம் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்தால் அதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

2. எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் நபர் மாதம் ஒன்றுக்கு 4 முறை மட்டுமே வங்கிக்கிளை, ஏ.டி.எம்.களில் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்க முடியும். 5-வது முறையாக எஸ்.பி.ஐ. வங்கியில் பணம் எடுத்தால் ரூ50 கட்டணம், வரிகள் விதிக்கப்படும்.  மற்ற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.

3. மெட்ரோ நகரங்களில் வசித்து சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 8 முறை ஏ.டி.எம்.களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். 5 முறை, மற்ற வங்கி ஏ.டி.எம். 3 முறை. பிற நகரங்களில்வசிப்பவர்கள் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.ம், பிற வங்கி ஏ.டி.எம்.களை தலா 5 முறை இலவசமாக பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

4. ஐ.எம்.பி.எஸ். வசதி மூலம் பணம் பரிமாற்றம் செய்தால் ரூ. ஒரு லட்சம் வரை ரூ. 5 கட்டணம், ேசவை வரிகளும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை, ரூ.15 கட்டணம், சேவைவரிகளும்,   ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ.25 கட்டணம், வரிகளும் விதிக்கப்படும்.

5. லேசாக கிழிந்த, அழுக்கு படிந்த ரூபாய் நோட்டுகளை 20 எண்ணிக்கைக்கு அதிகமாக, அல்லது அதன்மதிப்பு ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், சேவைக்கட்டணமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும்.

6. 10 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு ரூ.30 கட்டணம் சேவைவரி, 25 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு ரூ.75 கட்டணம், சேவைவரி, 50 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு ரூ.150 கட்டணம் மற்றும் சேவைவரியும் விதிக்கப்படும்.

7.புதிதாக டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்போது கட்டணம் விதிக்கப்படும். ஆனால், ரூபே கார்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது.

 

click me!