சிறையில் கைதி உடையை அணியாத சசி... வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!

 
Published : Mar 13, 2018, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
சிறையில் கைதி உடையை அணியாத சசி... வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்!

சுருக்கம்

Sasikala casual dress wearing in jail

பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலா மற்றும் இளவரசி கைதி உடையில் இல்லாமல் சாதாரண உடனில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதாகவும் அவர் மீது முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த 17-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா திடீரென்று ஆய்வு செய்த போது, அவர் சிறையில் தண்டனைபெற்றுவரும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருப்பதை பார்த்து அதிகாரியிடம் கடுமையாக பேசியிருந்தார்.

 ஆனால் அந்த அதிகாரிகள், அவர்கள் 2 பேரும் சிறை விதிமுறைக்கு உட்பட்டு தான் சாதாரண ஆடை அணிந்திருந்ததாக அதிகாரிகள் ரேகா சர்மாவிடம் கூறினார்கள். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிறையில் ரேகா சர்மா ஆய்வு செய்தபோது சாதாரண ஆடையில் சசிகலா இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"