
கடந்த நான்கைந்து வருடங்களாக கேரளாவை ‘வெச்சு செய்கிறது’ சரிதார் நாயரின் பரபரப்பு. சோலார் பேனல் அமைத்து தருகிறேன் என்று சொல்லி கேரளாவிலும், தமிழகத்திலும் கோடி கோடியாய் முதலீடு வாங்கி குவித்த சரிதாநாயரின் ‘டீம் சோலார்’ நிறுவனம் ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பெப்பே காட்டிவிட, பஞ்சாயத்து களை கட்டியது.
இந்த விவகாரத்தில் கைதாகி கேரளத்தின் பல சிறைகளை பார்த்துவிட்டு வெளியே வந்த சரிதா, இந்த மோசடி விவகாரத்தில் எனக்கு முதல்வர் உம்மன்சாண்டி (அந்த சமயத்தில் கேரளாவின் முதல்வர் உம்மன் சாண்டிதான்) வரை பல அரசியல்வாதிகள் உதவினார்கள் என்று ஒரு குண்டை தூக்கி வீசினார். அடுத்து இந்த பிஸ்னஸில் பல உதவிகளை செய்வதற்காக தன்னை பாலியல் ரீதியாக சிலர் பயன்படுத்தினார்கள் என்று அடுத்த அணுகுண்டையும் வீசினார்.
இந்த மோசடி வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனின் விசாரணை அறிக்கை கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியாகி, கேரளத்தை அலற வைத்திருக்கிறது. இந்த அறிக்கையின் மூலம் உம்மன் சாண்டிக்கும் சோலார் மோசடியில் பங்கிருக்கிறது என்பது போல் விவகாரம் வெளியாகி கேரளமே பரபரத்துக் கிடக்கிறது.
தன்னால் கேரள அரசியல் அமளி துமளியாகிக் கொண்டிருக்கும் பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி விசிட் செய்து கொண்டிருக்கிறார் சரிதா. அதுவும் ச்சும்மா இல்லை, ஒரு பிஸ்னஸ் வுமனாக. ஆம்! தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேப்பர் கப், கேரி பேக், போன்றவை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு இண்டஸ்ட்ரியை துவக்கியிருக்கிறார்.
இந்த புது பிஸ்னஸை பற்றி பேசும் சரிதா, “இயற்கையோடு இணைந்த தொழிலில் எனக்கு எப்பவுமே நாட்டம் உண்டு. பேப்பர் கப், பிளேட், பேக் (பைகள்) எல்லாமே தயாரிக்கிறேன். எல்லாமே எக்கோ ஃப்ரெண்ட்லிதான். இதுக்கு அடுத்து பேப்பர் பூக்கள் தயாரிக்கப்போறேன்.
என்னோட பேப்பர் பிளேட், பேக் எல்லாத்துக்குமே கேரளாவில் இருந்து நிறைய ஆர்டர் வருது. அதுமட்டுமில்லாம தமிழ்நாட்டுல இருந்தும் ஆர்டர்கள் நிறைய கிடைக்குது.
ஐ ஆம் ஹேப்பியானு சேட்டாஸ்!” என்று சிலிர்த்து குதூகழித்திருக்கிறார்.
பின்னே சரிதா நாயர் கம்பெனி பேக் என்றால் ச்சும்மாவா!
அடிப்பொலியானு!