Sania Mirza Pilot: இவுங்க அவுங்க இல்லீங்க! இந்திய போர் விமானப்படையின் முதல் முஸ்லிம் பெண் பைலட் சானியா மிர்சா

By Pothy Raj  |  First Published Dec 23, 2022, 10:58 AM IST

டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அரங்கில் முத்திரை பதித்த சானியா மிர்சாவைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்திய விமானப்படையின் போர்ப் படையில் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சானியா மிர்சா முதல்முறையாக பைலட்டாகியுள்ளார்.


டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அரங்கில் முத்திரை பதித்த சானியா மிர்சாவைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்திய விமானப்படையின் போர்ப் படையில் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சானியா மிர்சா முதல்முறையாக பைலட்டாகியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தில் இருந்து விமானப்படையின் போர்ப்படையில் பெண் பைலட்டாகியுள்ள முதல் பெண் சானியா மிர்சா என்பது பெருமைக்குரியது.

Tap to resize

Latest Videos

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு முன்னேறியது இந்தியா... ஒப்புதல் வழங்கியது நிபுணர் குழு!!

உத்தரப்பிரேதசத்தில் சாதாரண டிவி மெக்கானிக்கிற்கு மகளாகப் பிறந்து மிகப்பெரிய உயர்வை சானியா மிர்சா எட்டியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் தேகத் கோட்வாலி காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஜசோவர் கிராமம் சானியா மிர்சாவுக்கு சொந்த ஊராகும். தேசிய பாதுகாப்புப்படையின் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சானியா மிர்சா தனது மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். வரும் 27ம் தேதி புனேயில் உள்ள தேசிய பாதகுாப்பு அகாடெமியில் சானியா மிர்சா பயிற்சிக்காக சேர உள்ளார்.

சானியா மிர்சா கூறுகையில் “ நான் ஆங்கில மீடியத்தில் படிக்கவில்லை, என்னுடைய தாய்மொழியான இந்தியில் படித்துதான் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். தாய்மொழியில் படித்த எவரும் தீர்மானமாக இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய பெற்றோர்தான் காரணம். என்டிஏ பைலட் பிரிவில் பெண்களுக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நான் 2வது முயற்சியிலேயே அந்த இடத்தைப் பிடித்துவிட்டேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சாவின் தந்தை ஷாகித் அலி கூறுகையில் “ இந்தியாவின் முதல் பெண் பைலட் அவினி சதுர்வேதியை முன்னுதாரணமாக வைத்து சானியா மிர்சா செயல்பட்டார். சானியா மிர்சா தொடக்கத்தில் இருந்தே சுதுர்வேதியைப் போன்று உருவாக விரும்பினார். அதைப்போலவே நாட்டின் 2வது பெண் பைலட் போர்ப்படையின் முதல் பைலட் என்ற பெருமையும்கிடைத்துள்ளது. சானியாவை நினைத்து கிராமும், மாவட்டமும் பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்தார்

மருத்துவர் சீட்டின்றி ஆன்டிபயாடிக்ஸ் மருந்து விற்றால் மருந்துக் கடை உரிமம் ரத்து:கேரள அரசு அதிரடி

சானியா மிர்சா தனது கிராமத்தில் உள்ள பண்டிட் சிந்தாமணி துபே இன்டர் காலேஜ்ஜில் 10ம் வகுப்புவரை படித்து, அதன்பின் குருநானக் மகளிர் கல்லூரியில் 12ம் வகுப்புபடித்துஅதில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, என்டிஏ பயிற்சித் தேர்வுக்காக தயாராகினார்.

என்டிஏ தேர்வில் மொத்தம் 400 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் 19 இடங்கள் பெண்களுக்காகவும் அதில் போர்விமானத்துக்கான பைலட் பிரிவில் 2 இடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்படும். அந்த இரு இடங்களில் ஒரு இடத்தை சானியா மிர்சா பிடித்துள்ளார்


 

click me!