கொரோனா XBB மாறுபாடு குறித்து பரவும் வாட்ஸ்அப் செய்தி உண்மையில்லை... மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்!!

By Narendran S  |  First Published Dec 22, 2022, 7:04 PM IST

XBB ஒமைக்ரான் திரிபு வைரஸ் குறித்து பரவி வரும் வாட்ஸ் அப் செய்திகள் போலியானது என்றும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


XBB ஒமைக்ரான் திரிபு வைரஸ் குறித்து பரவி வரும் வாட்ஸ் அப் செய்திகள் போலியானது என்றும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் பிற நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், XBB ஒமைக்ரான் திரிபு வைரஸ் டெல்டா மாறுபாட்டை விட ஐந்து மடங்கு அதிக வீரியம் மிக்கது என்றும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் வாஸ்ட் அப்பில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் அதன் அறிகுறிகள் மற்ற துணை வகைகளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன என்றும் அந்த செய்தியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா... மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!!

Tap to resize

Latest Videos

undefined

இந்த செய்தி வைரலானதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வாட்ஸ்அப் செய்தியை போலியானது என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் இதை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், ஒமைக்ரானை XBB ஒமைக்ரான் திரிபு வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று தற்போதைய தரவு தெரிவிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு  கூறுகிறது. மேலும் இது டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது. நவம்பர் 2022ல், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் டெல்டா மாறுபாட்டை விட XBB மாறுபாடு மிகவும் ஆபத்தானது அல்லது மிகவும் கடுமையான கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கூற்றுகளை முறியடித்தது.

இதையும் படிங்க: மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு முன்னேறியது இந்தியா... ஒப்புதல் வழங்கியது நிபுணர் குழு!!

இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷனின் (IHME) கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி, ஒமைக்ரானின் முந்தைய பதிப்புகளை விட XBB மாறுபாடு மிகவும் பரவக்கூடியதாக இருந்தாலும், அது குறைவான கடுமையான நோயை ஏற்படுத்துவதாகவும் தோன்றுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், சீனாவில் சமீபத்திய கொரோனா அலையை இயக்கும் மாறுபாடு ஒமைக்ரானின் துணை வகையான BF7 வைரஸ் தான். XBB வைரஸ் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



This message is circulating in some Whatsapp groups regarding XBB variant of .

The message is and . pic.twitter.com/LAgnaZjCCi

— Ministry of Health (@MoHFW_INDIA)
click me!