அதிபயங்கர வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்... மருத்துவமனை சுகபிரசவம்!

By vinoth kumarFirst Published Aug 17, 2018, 6:04 PM IST
Highlights

கேரள வெள்ளத்தில் சிக்கிய நிரைமாத கர்ப்பிணியை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். பிறகு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜிதா ஜாபீல்(25) என்ற பெண் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

கேரள வெள்ளத்தில் சிக்கிய நிரைமாத கர்ப்பிணியை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். பிறகு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜிதா ஜாபீல்(25) என்ற பெண் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கேரளாவில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரளா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதுவரை கேரளா வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டும், சிலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் கேரளாவில் துன்பத்தில் ஒரு இன்பம் நடைபெற்றுள்ளது. கேரள வெள்ளத்தில் இருந்து நிரைமாத கர்ப்பிணியாக மீட்கப்பட்ட சஜிதா ஜாபீல்(25) அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த இவரை நிரைமாத கர்ப்பிணியாக இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவருக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக சஜிதா கூறுகையில் வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த தாய் அடைந்திருப்பது மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியுள்ளார்.

click me!