அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் சஜி செரியன்.. அதிர்ச்சியில் பினராய் விஜயன். கேரள அரசியலில் பரபரப்பு.

Published : Jul 06, 2022, 07:09 PM ISTUpdated : Jul 06, 2022, 07:40 PM IST
அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் சஜி செரியன்.. அதிர்ச்சியில் பினராய் விஜயன். கேரள அரசியலில் பரபரப்பு.

சுருக்கம்

அரசியல் சாசனத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கேரள மாநில அமைச்சர் சஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள மாநில அமைச்சர் சஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரளா அமைச்சரவையில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக அவர் இருந்து வந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்ததாக அவர் கூறியுள்ளார். சஜி செரியன் ராஜினாமா விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:  நடு ராத்திரியில் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு உல்லாசம்.. போலீசில் கதறல்.

கடந்த திங்கட்கிழமை பத்தனம்திட்டா வில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர்  செரியன் அரசியலமைப்பு சட்டம் குறித்து சில கருத்துக்களைக் கூறினார். அரசியலமைப்பு என்பது சுரண்டலுக்கான கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார், நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு அழகான அரசியலமைப்புச் சட்டம் என்று நாம் கூறிக் கொள்கிறோம், ஆனால் அது பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுக்கப்பட்ட அரசியலமைப்பாக எழுதப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புச் சட்டம்  சுரண்டலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

இதையும் படியுங்கள்: மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா... இதுதான் காரணமா?

இது சாமானியர்களையும், தொழிலாளர் வர்க்கத்தையும் கொள்ளையடிக்கவே உதவுகிறது, இந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டதன் மூலம் அது அழகாக காட்டப்பட்டுள்ளது. அது அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இதில் சுரண்டல் பகுதி மிகவும் தெளிவாக உள்ளது, கடந்த 75 ஆண்டுகளாக நாம் பொறுமையுடன் இந்த முறையை பின்பற்றியுள்ளோம் என்று அவர் ஆவேசமாக கூறினார். அவரின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியலமைப்பு சட்டத்தையே இப்படி விமர்சித்து பேசலாமா என காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் செரியனுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தனர். செரியன் உடனே ராஜினாமா செய்ய வேண்டுமென அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன், அது எனது தனிப்பட்ட முடிவு, அரசியல் அமைப்பை நான் ஒருபோதும் அவதூறாக பேசவில்லை.

சிபிஎம் மற்றும் எல்.டி.எஃப்.ஐ  பலவீன படுத்துவதற்காக நான் பேசிய உரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து ஊடகங்களில் புனையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி முழுக்க முழுக்க திரிக்கப்பட்ட ஒன்று என அவர் வேதனை தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஜி செரியன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!