
சட்டீஸ்கரில் வீரமரணமடைந்த 12 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் 6 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சாய்னா நேவால் தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கொண்டாட்டத்தின் பிறகு பேசிய சாய்னா, நாட்டு மக்களைக் காப்பாற்ற சட்டீஸ்கரில் உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரின் 12 குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 6 லட்ச ரூபாய் வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக,12 இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தார்.
இவரைத்தொடர்ந்து தற்போது சாய்னா நேவால் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கடந்த வாரம் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் சிஆர்பிஎஃப் ஜவான்கள் 12 பேர் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.