சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது… தமிழ் எழுத்தாளர் மீனாட்சிக்கு அறிவிப்பு!!

By Narendran SFirst Published Aug 24, 2022, 6:28 PM IST
Highlights

சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் எழுத்தாளர் மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் எழுத்தாளர் மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் வெற்றி: பாஜக வெளிநடப்பு

தமிழில் சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு மல்லிகாவின் வீடு எனும் சிறுவர் சிறுகதை தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருதை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் எனும் தொகுப்புக்காக ப.காளிமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா காலத்தில் பீகார் தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த டெல்லி விவசாயி தற்கொலை

இந்த விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் , 2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விருது பெறுபவர்களுக்கு விருதுடன் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!