பீகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
பீகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
ஆனால், வாக்கெடுப்பின்போது பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்துள்ளார்.
நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் வீட்டில் இன்று சிபிஐ ரெய்டு நடந்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. ஆனால், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கூட்டணிக்கு 160 இடங்களுக்கு மேல் இருந்தது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் இன்று மாலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அவையில் இருந்த பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.