Sahara Group Founder Died: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்..!

Published : Nov 15, 2023, 07:02 AM ISTUpdated : Nov 15, 2023, 09:12 AM IST
Sahara Group Founder Died: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்..!

சுருக்கம்

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் (75) விதிகளை மீறி, ரூ. 24 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை திரட்டிய வழக்கில் 2014-ம் ஆண்டு கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அனுமதியுடன் பரோலில் வெளியே வந்த அவருக்கு கடந்த 12ம் தேதி உடல்நலக்குறைவு  ஏற்பட்டது.  

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

சுப்ரதா ராய்  என்பவர் சகாரா இந்தியா பரிவார் அமைப்பின் நிறுவனர். இந்தியப் பெரும் தொழில் குழுமத் தலைவர் ஆவார். நில விற்பனை, விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்தித்தாள், விடுதிகள், சில்லறை வணிகம் போன்ற துறைகளில் சுபத்ரா ராயின் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க;- முட்டாள்களின் ராசாவே... எந்த உலகத்துல இருக்க...! ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

இந்நிலையில், ரூ. 24 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை திரட்டிய வழக்கில் உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டில் பிப்ரவரி 26ம் தேதி சுபத்ரா ராய்க்கு சிறைத் தண்டனை வழங்கியது. பின்னர், நீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளியே வந்த அவருக்கு கடந்த 12ம் தேதி உடல்நலக்குறைவு  ஏற்பட்டது.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்பட பல உடல்நல கோளாறுகளால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சுப்ரதாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று உத்தரப் பிரதேசத்தின் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்