முட்டாள்களின் ராசாவே... எந்த உலகத்துல இருக்க...! ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

By SG Balan  |  First Published Nov 15, 2023, 12:17 AM IST

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்திய மக்களிடம் ‘மேட் இன் சைனா’ போன்கள் உள்ளன என்று சொல்பவர் 'முட்டாள்களின் ராஜா' என்று வசைபாடினார்.


மத்தியப் பிரதேச மக்கள் மத்தியில் பாஜக மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையும் பாசமும் இருப்பதைக் காண்பதாகவும், தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெதுல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் கடைசி நாளில் ஏராளமானோர் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டு, பாஜகவின் வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Latest Videos

undefined

"நாளை பகவான் பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்த நான் ஜார்க்கண்ட் செல்கிறேன். பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியைக் நாடே கொண்டாட உள்ளது. அன்று பழங்குடியினர் நலனுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும்" என பிரதமர் மோடி கூறினார்.

தொலைதூர இலக்கைத் தகர்க்கும் நிர்பய் ஏவுகணை! முப்படைகளுக்கு வலுசேர்க்கும் புதிய ராக்கெட்!

வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸின் பொய்கள் அம்பலமாகி வருகின்றன என்ற மோடி, காங்கிரஸ் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, தனது அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்வதாகவும் சாடினார். மோடியின் உத்தரவாதங்களுக்கு முன்னால் காங்கிரஸின் போலி வாக்குறுதிகள் பலிக்காது என்றும் சொன்னார்.

Thank you Indore! pic.twitter.com/VzqwmFndVz

— Narendra Modi (@narendramodi)

ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து, முத்தலாக் தடை சட்டம், அயோத்தி ராமர் கோவில் ஆகியவை நிறைவேறும் என்று காங்கிரஸ் ஒருபோதும் நம்பவில்லை என்ற மோடி, இதையெல்லாம் நாங்கள் தான் செய்துள்ளோம் என்று சொன்னார். மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்ற அவர், இது எனது உத்தரவாதம் எனவும் கூறினார்.

திங்களன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மக்களின் பாக்கெட்டுகளில் உள்ள மொபைல் போன்களில் உள்ள "மேட் இன் சைனா" என்ற குறிப்பை "மேட் இன் மத்தியப் பிரதேசம்" என்று மாற்ற வேண்டும் என்று கூறினார். இதனை விமர்சித்துப் பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் மொபைல் போன்கள் தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறினார்.

இந்திய மக்களிடம் ‘மேட் இன் சைனா’ போன்கள் உள்ளன என்று சொல்பவர் 'முட்டாள்களின் ராஜா' என்றும் பிரதமர் மோடி வசைபாடினார். சில காங்கிரஸ் தலைவர்கள் வெளியே செல்ல விரும்பாமல் வீட்டிலேயே  உட்கார்ந்திருப்பதாகவும் கேலி செய்தார்.

"காங்கிரஸ் தலைவர்களுக்கு அவர்கள் மக்களுக்கு என்ன சொல்வார்கள் என்று சொல்லத் தெரியவில்லை. மோடியின் உத்தரவாதங்களுக்கு முன் அவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு வாய்ப்பில்லை என்பதை காங்கிரசே ஏற்றுக்கொண்டுவிட்டது," என்றும் மோடி கூறினார்.

"காங்கிரஸ் எங்கு ஆட்சிக்கு வந்தாலும், அங்கு அழிவைக் கொண்டுவந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று தெரிவித்த பிரதமர், இந்தத் தேர்தல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் ஊழலையும், கொள்ளையையும் தடுப்பதற்கான தேர்தல் என்றும் குறிப்பிட்டார்.

கிராமி விருதுக்கான ரேஸில் பிரதமர் மோடி எழுதிய சிறுதானியங்கள் பற்றிய பாடல்

click me!