Online Sabarimala: சபரிமலையில் குவியும் பக்தர்கள் ! 28 நாட்களில் கொழித்த வருமானம்

By Pothy RajFirst Published Dec 16, 2022, 12:04 PM IST
Highlights

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் அதேநேரத்தில், வருமானமும் குவிந்து வருகிறது

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும் அதேநேரத்தில், வருமானமும் குவிந்து வருகிறது

சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த கார்த்திகை 1ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதுவரை கடந்த 28 நாட்களில் பக்தர்கள் கூட்டம் தினசரி 90ஆயிரத்துக்கும் மேல் குவிந்து வருகிறார்கள்.
 இதனால் நிலக்கல் பகுதியில் 5.கி.மீ தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காட்டுப்பகுதியில் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் உணவு, குடிநீர் இன்றி 10 மணநேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. 

ஆசை யாரை விட்டுச்சு!கிட்னி விற்பனையில் ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்த மாணவி

பக்தர்கள் கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாமி தரினம் செய்ய நீண்டநேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் இருக்கிறது.

திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் கே.ஆனந்தகோபன் கூறுகையில் “ இளவுங்கால் வனப்பகுதியில், மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்க தன்னார்வலர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். 

சபரிமலையில் உள்ள புனிதமான 18 படிகளிலும் நிமிடத்துக்கு 65 பக்தர்கள் ஏறி வருகிறார்கள். இந்த படிக்கட்டுகளில் அனுபவம் மிகுந்த போலீஸாரை பணிக்கு அமர்த்துமாறு அரசிடம் கேட்டுள்ளோம். 
தினசரி 90ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது, பக்தர்கள் வசதிக்காக பூஜைகள் நிறுத்தப்படாமல் நடக்கிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுங்கள்:பாஜக எம்.பி. சுஷில் மோடி கூற காரணம் என்ன?

சிறுகுழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட பக்தர்களை பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்யவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் இவர்கள் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புக்கிங் தவிர நேரடியாக டிக்கெட் பெறுதலிலும் 10ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி டிக்கெட் தரப்படுகிறது. 

நிலக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 7 ஆயிரம் வாகனங்கள் வரை நிறுத்தப்படுகிறது. இதை 12ஆயிரமாக அதிகரி்த்துள்ளோம். கொரோனாவுக்கு முன் பெரும்பாலான பக்தர்கள் அரசுப் பேருந்துகளில்தான் வந்தார்கள், இப்போது காரில் வருகிறார்கள். அவர்களின் வாகனங்களை நிறுத்த தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்தார்

இதையடுத்து, பக்தர்கள் வசதிக்காக, சாமி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே பக்கர்தள் வருகையால், கடந்த 28 நாட்களில், சபரிமலை தேவஸம்போர்டுக்கு வருமானம் ரூ.148 கோடியை எட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு கொரோனா பரவலில் சீசன் முழுவதும் ரூ.151 கோடிதான் தேவஸம்போர்டுக்கு கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டுசீசன் தொடங்கி 28 நாட்களிலேயே ரூ.148 கோடியை வருமானம் எட்டியுள்ளது. 

36-வது ரஃபேல் போர் விமானம் பிரான்ஸிலிருந்து இந்தியா வந்தடைந்தது

இந்த சீசன் 2023, ஜனவரி 21ம்தேதிதான் முடிகிறது. இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேல் நாட்கள் இருப்பதால் இந்த ஆண்டு சபரிமலை சீசனில் திருவிதாங்கூர் தேவஸம்போர்டுக்கு வருமானம், ரூ.200 கோடிக்கு மேல் அதிகரிக்கும் எனத் தெரிகிறது

கொரோனாவுக்கு முன்பு, பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர். இதனால், ஏற்பட்ட சலசலப்பு, பிரச்சினையால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கனிசமாகக் குறைந்து வருவாய் பாதிக்கப்பட்டது.

அதன்பின் கொரோனா பரவல் ஏற்பட்டு, வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப்பின் சபரிமலையில் பக்தர்கள் கூட்டமும் அலைமோதுகிகிறது. திருவிதாங்கூர் தேவஸம்போர்டுக்கு வருமானமும் குவிந்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டில் ரூ.277.96 கோடி, 2018ல் ரூ.179 கோடி, 2019ல் ரூ.269 கோடி, 2020ம் ஆண்டில் ரூ.21.17 கோடி, 2021ம் ஆண்டில் ரூ.151 கோடி, 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.148 கோடி வருமானம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கிடைத்துள்ளது

click me!