பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு..!

By vinoth kumarFirst Published Dec 16, 2022, 10:31 AM IST
Highlights

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணி முதலிடம்… ஸ்விகி நிறுவனம் தகவல்!!

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 39 பேர் உயிரிழந்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்தவர்களுக்கு கள்ளச்சாரயத்தை விற்பனை செய்ததவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக கையில் எடுத்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சங்களையும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;-  Petrol Diesel Price: இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகக்குறைவு! ஹர்தீப் பூரி பெருமிதம்

click me!