கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது
கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது
1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த வெற்றியின் விளைவாகத்தான் வங்கதேசம் எனும் தேசம் உருவாக இந்திய ராணுவம் காரணமாகஅமைந்தது.
இந்தியாவில்தான் பெட்ரோல் விலை மிகக்குறைவு! ஹர்தீப் பூரி பெருமிதம்
இதே நாளில் வங்கதேசத்தில் பிஜோய் திவாஸ் என்ற பெயரில், ராணுவ வீரர்களின் துணிச்சல், வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.
விஜய் திவாஸ் வரலாறு
கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் செங்கிஸ்கான் எனும் ஆப்ரேஷனை செயல்படுத்தி இந்தியாவின் 11 ஏர் ஸ்டேஷன்கள் மீது தாக்குதல் நடத்தியது. 13 நாட்கள் நடந்த இந்த போரில் இந்திய ராணுவத்தின் வீரத்தையும்,துணிச்சலையும், தீரத்தையும் எதிர்கொள்ள முடியாமல் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது.
டெல்லி ஆசிட் வீச்சு:ஆன்லைனில் ஆசிட் வாங்கிய இளைஞர்கள்! பிளிப்கார்ட், அமேசானுக்கு நோட்டீஸ்
ஏறக்குறைய 93ஆயிரம் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் அமிர் அப்துல்லா கான் நைஜி, இந்திய ராணுவத்திடமும், வங்கதேசத்தின் முக்கி வாகினினியிடம் சரணடைந்தமைக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.உலகளவிலும், ஆசியப் பிராந்தியத்திலும் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்க இந்த போர் வெற்றி முக்கியமானதாகஅமைந்தது.
இந்த போரில் இந்தியா சார்பில் 3900 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், 9,851 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவூட்டும் விதத்தில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது
முக்கியத்துவம் என்ன
இந்தியாவின் மக்களையும், தேசத்தையும் காக்க ராணுவத்தின் போராட்டமும், போர்புரிந்த வீரச் செயலும் போற்றுதற்குரியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பெற்ற வெற்றியும், அதனால் வங்கதேசம் எனும் தேசம் உருவானதையும் கொண்டாடும் வகையில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கொண்டாட்டம் எப்படி
இந்த ஆண்டு விஜய் திவாஸ் நாளில் ராணுவத்தின் தெற்கு கமாண்டன்ட் சிறப்பு ஓட்டப்பந்தயம் மூலம் கொண்டாடுகிறது. சதர்ன் ஸ்டார் விஜய் ரன்-22 என்ற பெயரில் வீரர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. ரன் வித் சோல்ஜர், ரன் ஃபார் சோல்ஜர் என்ற பெயரில் ராணுவம் சார்பில் ஓட்டப்பந்தம் 15 நகரங்களில் நடத்தப்படுகிறது.
பெண்களை நசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு! ஒரு உறுப்பினர்கூட இல்லை: ராகுல் காந்தி விளாசல்
12.5 கி.மீ ஓட்டப்பந்தயத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், 5.கி.மீ தொலைவு பந்தயத்தில் பள்ளி மாணவர்களும், 4கி.மீ தொலைவுக்கான ஓட்டத்தில் பெண்களும் பங்கேற்கலாம். இதில் 12.50 கி.மீ தொலைவு ஓட்டத்துக்கு ரூ.50ஆயிரம் பரிசும், மற்ற இரு போட்டிகளுக்கு தலா ரூ.22ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.