சபரிமலையில் பெண்கள் தரிசனம் – தனிநபர் மசோதாவுக்கு தேவஸ்தான மந்திரி எதிர்ப்பு

By manimegalai aFirst Published Jun 20, 2019, 12:32 PM IST
Highlights

ஆண்டு தோறும் கார்த்திகை மாத முதல் நாளில், ஆயிரக்கணக்கானோ சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வருகின்றனர். 48 நாள் விரதத்துக்கு பின்னர் அவர்கள், இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். இதில் பெண்களுக்கு வயது கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது.

ஆண்டு தோறும் கார்த்திகை மாத முதல் நாளில், ஆயிரக்கணக்கானோ சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வருகின்றனர். 48 நாள் விரதத்துக்கு பின்னர் அவர்கள், இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். இதில் பெண்களுக்கு வயது கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது.

இந்த வேளையில், கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை சட்டமாக்க கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்தது.

இதற்கு இந்து முன்னணியினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், கோயில் வளாகத்தில் கைகலப்பு, தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடந்தன. ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக, கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்பி என்.கே.பிரேமசந்திரன் மக்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இம்மசோதா, இந்த வாரம் விவாதத்துக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கேரள அரசு, பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், சபரிமலை  ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பான விவகாரம், தனிநபர் மசோதாவாக மத்திய அரசின் முன்பு இருக்கிறது. இதற்கு முன் பல்வேறு தனிநபர் மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், இந்த தனிநபர் மசோதாவின் கதி என்னவாகும் என எல்லோருக்கும் தெரியும்.

அதுபோன்ற நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும். மாநில பாஜக தலைமையும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

click me!