அடித்து நொறுக்கப்பட்டது ரஹானா வீடு...! தர்பூசணியா சாப்பிடுகிறாய் என கொச்சியில் ஆவேசம்...

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 11:07 AM IST
Highlights

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே கேரளாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சபரிமலை சீசன் வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே கேரளாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சபரிமலை சீசன் வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. நேற்று முன்தினம் முதல் சீசனும் ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், நேற்று முந்தினநாள் மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. 

எதிர்பார்த்ததைப்போல தமிழகத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் எந்த பெண்களும் சபரிமலை ஏறுவதற்கு முன்வரவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த பெண் மாதவி, தன் குடும்பத்தினரும், வேறு சில பெண்களும் மலையேற துவங்கினர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாமல் மாதவி காலில் விழுந்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்திற்குமேல் மாதவியால் முன்னேறிச்செல்ல முடியாமல் போனது. சபரிமலையின் பாதி தூரம் வரை சென்று முன்னே செல்ல முடியாமல் திரும்பி வந்து விட்டார். 

மேலும் பெண் பத்திரிகையாளர் சுகாசினியும், ஹெல்மெட் அணிந்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் வரை சென்று எதிர்ப்பு காரணமாக திரும்பி விட்டார். இந்த நிலையில்தான் பிரபலமில்லாத மோஜோ எனும் பத்திரிகையைச் சேர்ந்த கவிதா என்ற செய்தியாளரும், கொச்சியைச் சேர்ந்த ரஹானா என்ற பெண்ணியவாதியும், இன்று காலை மலையேற தொடங்கினார். நிலக்கல்லில் தொடங்கிய எதிர்ப்பு மற்றும் பக்தர்களின் வேண்டுகோளைத் தாண்டி தொடர்ந்து முன்னேறி சென்றனர் இருவரும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த போலீசாருடன், இவர்களும் ஹெல்மெட் அணிந்து சென்றனர். 

கிட்டதட்ட சபரிமலை கோயிலை அடைந்துவிட்ட நிலையில் ரஹானா, ஹாயாக பையில் கொண்டு வந்திருந்த வாழைப்பழம் மற்றும் பிஸ்கெட்டுகளை சாப்பிட்டுக் கொண்டே முன்னேறினார். தன்னைச் சுற்றி அவ்வளவு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதை கண்டுகெள்ளாமலே வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டே அவர் முன்னேறினார். இந்த காட்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கொச்சியில் உள்ள ரஹானா வீட்டை முற்றுகையிட்டனர். 

ஒரு கட்டத்தில் ரஹானாவின் வீட்டுக்குள் புகுந்த ஐயப்ப பக்தர்கள், வாழைப்பழமா சாப்பிடுகிறாய் என்று கூறி, அவரது வீட்டு கண்ணாடி, கார் ஆகியவற்றை துவம்சம் செய்தனர். ஐயப்ப பக்தர்களின் இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

click me!