Russia Ukraine War: அச்சமூட்டும் வான்வழித்தாக்குதல்..இந்தியர்களை மீட்பது எப்படி..? ரஷ்யா கைக்கொடுக்குமா..?

Published : Mar 02, 2022, 08:04 PM IST
Russia Ukraine War: அச்சமூட்டும் வான்வழித்தாக்குதல்..இந்தியர்களை மீட்பது எப்படி..? ரஷ்யா கைக்கொடுக்குமா..?

சுருக்கம்

கார்கீவ் இருந்து இந்தியர்களை வெளியேற்றுமாறு ரஷ்யா தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, இந்திய தூதரகம் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ்வை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து நடந்தாவது வெளியேறுங்கள் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் இன்று மூடப்பட்ட நிலையில்  கார்கீவ் நகரைவிட்டு இந்திய நேரப்படி 9.30 மணிக்குள் இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும் உக்ரனைவிட்டு வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தூதரகத்தின் அறிவுறுத்தலின் படி, ஏறத்தாழ 17,000 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர் என்றார்.

மேலும் உக்ரைனின் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை அழைத்து வர அடுத்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதில் சில விமானங்களும் பயணத்தை தொடங்கிவிட்டன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் என மொத்தம் 15 விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதில் இருந்து உக்ரைனிலிருந்து 3,352 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்று கூறினார்.

இந்திய விமானபடையின் சி-17 விமானமும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இணைந்துள்ளனர். ரோமானியாவிலிருந்து முதல் விமானப்படை விமானம் இன்று நள்ளிரவு டெல்லி வரவுள்ளன. மேலும் 3 விமானங்கள் இன்று கிளம்பவுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரமான, கார்கீவ் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் அங்குள்ள இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதனால், அங்கிருந்து நேற்றிரவு, இன்று காலை சில மாணவர்கள் ரயில்கள் மூலம் வெளியேறியுள்ளனர் என்று பேசினார்.

கார்கீவ் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பாக ரஷ்யாவிடம் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் இன்று உயிரிழந்த சந்தால் ஜிண்டால், இயற்கையாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் உக்ரைனில் தான் இருக்கின்றனர். கார்கீவ் இருந்து இந்தியர்களை வெளியேற்றுமாறு ரஷ்யா தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, இந்திய தூதரகம் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பாஸ்போர்டை தவறவிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற நாட்டவர் உதவி கேட்டால், அவர்களுக்கும் கண்டிப்பாக உதவ தயாராக இருக்கின்றோம். கிழக்கு உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க குழுக்களை அனுப்புவது குறித்து அலோசித்து வருகிறோம் என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!