இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை! டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது! நிர்மலா சீதாராமன் சொன்ன புது விளக்கம்

By Raghupati RFirst Published Oct 16, 2022, 3:16 PM IST
Highlights

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி :

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைத்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது.

நிர்மலா சீதாராமன் :

இந்நிலையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றார். நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார்.

இதையும் படிங்க..குழந்தை திருமண விவகாரம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கைது! பரபரப்பு சம்பவம்!

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது.

பணவீக்கம் :

வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

அமலாக்க இயக்குனரகம் :

மத்திய அமலாக்க இயக்குனரகம் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது. கார்ப்பரேட் துறையினர் மற்றும் பொது சமூக பிரிவினருக்கு அது எவ்வித அச்சுறுத்தையும் ஏற்படுத்தவில்லை. குற்றங்கள் தொடர்பாக முன்னறிவிப்பு செய்து விசாரணையை நடத்தும் நடைமுறையை பின்பற்றும் ஒரு நிறுவனம். மத்திய அமலாக்க இயக்குனரகம் அளிக்கும் தண்டனை விகிதம் மிகவும் குறைவானது.

குற்றத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னரே மத்திய அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. தனிப்பட்ட வழக்குகள் அல்லது அணுகுமுறை குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக, அது எங்கு சென்று சோதனை நடத்தினாலும் முதன்மையான ஆதாரங்கள் அதனிடம் நிச்சயம் இருக்கும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..வாழ்நாள் முழுவதும் அதிபராகும் ஜின்பிங்! கம்யூனிஸ்ட் மாநாட்டில் எல்லாமே தயார்! கடைசியில் எல்லாமே போச்சா!

click me!