பிஜேபி.,யின் ஸ்லீப்பர் செல்... வேற யாரு நம்ம ராகுல் பையாதான்! குஜராத் பை எலக்சன்ல 7க்கு 5 சீட் அள்ளிருச்சில்ல..!

Asianet News Tamil  
Published : Oct 10, 2017, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
பிஜேபி.,யின் ஸ்லீப்பர் செல்... வேற யாரு நம்ம ராகுல் பையாதான்! குஜராத் பை எலக்சன்ல 7க்கு 5 சீட் அள்ளிருச்சில்ல..!

சுருக்கம்

Ruling BJP wins 5 of 7 municipality seats one taluka panchayat seat

குஜராத் மாநிலத்தில் அண்மைக்காலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. 

குஜராத் மாநிலத்துக்கு ஏற்ற வகையில், கோயில்களுக்குச் சென்று, சாமி கும்பிட்டு, பயபக்தியுடன் பேசவும் செய்தார். அடுத்து, மாநில அரசையும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடியையும் தாக்கிப் பேசவும் செய்தார். 

இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 7 முனிசிபல்களில் 7ல் 5 இடங்களை பாஜக வென்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 

7 முனிசிபல்களுடன் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா பஞ்சாயத்துக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடங்களில் முன்னர் 2 இடங்களே பெற்றிருந்தது பாஜக., ஆனால் இப்போது அது மூன்று மடங்கு அதிகமாக, 6 இடங்களைப் பெற்றிருக்கிறது. 7ல் 5 முனிசிபல்களையும், ஒரு தாலுகா பஞ்சாயத்தையும் வென்றுள்ளடு பாஜக., இந்த இடங்களில் காங்கிரஸ் பலம் பாதியாகக் குறைந்து விட்டது.  இடைத்தேர்தல்களில் பாஜக., பெற்றுவரும் தொடர் வெற்றியின் வரிசையில் இதுவும் சேர்ந்துவிட்டது. 

ராகுல் காந்தி பிரசாரம் செய்யச் செல்லும் இடங்களில் பெரும்பாலும் அவருக்கு தோல்வியே கிடைத்து வருகிறது. இதனால், ராகுல் காந்தியை காங்கிரஸில் உள்ள பாஜக.,வின் ஸ்லீப்பர் செல் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது.. அச்சுதானந்தன் முதல் ரோகித் சர்மா வரை.. பத்ம விருதுகள் முழு லிஸ்ட்!