"எந்த சின்னத்துக்கு ஓட்டு போட்டாலும் தாமரையில் லைட் எரியுது" - ஆர்டிஐ பகீர் குற்றச்சாட்டு!!

First Published Jul 23, 2017, 10:45 AM IST
Highlights
RTI accuses vote machines


வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தவறு செய்யாது என தேர்தல் ஆணையம் ஆணித்தரமாக கூறிவருகிறது. ஆனால் சனிக்கிழமை  ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்தில் வாக்குப்பதிவானதை குறிக்கும் விளக்கு எரிந்து உள்ளது. 

 தேங்காய் சின்னம் அங்கு சுயேட்சையாக போட்டியிட்டவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுல்தான்பூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வருவாய் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சுயேட்சை வேட்பாளர் அஷாதி அருண் புகார் தெரிவித்தது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்தார். 

இதற்கு, சுல்தான்பூரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சுயேட்சை வேட்பாளருக்கான தேங்காய் சின்னத்தில் வாக்களித்தால், பாஜக வேட்பாளரின் தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்தது, வாக்கு அவருக்கு சென்று உள்ளது என கால்காய் விளக்கம் அளித்து உள்ளார். 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பது தொடர்பாக வாக்காளர்கள் காலையில் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்து உள்ளனர். மதியமும் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர் தேர்தல் அங்கு ரத்து செய்யப்பட்டது.

தவறாக வாக்குகள் சென்ற இயந்திரம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் நெருக்கடியை அடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடந்தது என ஆர்.டி.ஐ. பதிலில் தெரியவந்து உள்ளது. 

இந்த தவறு வாக்காளர்கள் மூலம் அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

click me!