ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வை அறிவித்து, அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார் என சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
ஞாயிறுக்கிழமை மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வை அறிவித்து, அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார் என சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் தலைவர், "பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிப்பதற்காகவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையில் மாற்றத்தை விரும்புகிறது. பிரதமர் மோடி இதனால் வெளியேற இருக்கிறார்" என அவர் கூறினார்.
மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறை கிடைக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை!
"பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு யார் பிரதமர் என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் முடிவு செய்யும். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அதனால்தான் மோடி நாக்பூர் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க அழைக்கப்பட்டார்," என்று சஞ்சய் ராவத் மேலும் கூறினார்.
சஞ்சய் ராவத் பேச்சுக்கு ஆதரவும் மறுப்பும்:
சஞ்சய் ராவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக ஒரு காங்கிரஸ் தலைவரும் கூறினார். "அவர் சொன்னது சரி என்று நான் நினைக்கிறேன். 75 வயதைத் தாண்டியவர்களுக்கு அவர்கள் (பாஜக) ஓய்வு அளிக்கிறார்கள். பிரதமர் மோடிக்கும் வயதாகிவிட்டது. எனவே அவர்கள் இப்போது ஓய்வு பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அவர்களை மகிழ்விக்க அவர் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு, விஹெச்பி மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை உருவாக்கியது," என்று காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய் தெரிவித்துள்ளார்.
ஆனால், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் சஞ்சய் ராவத்தின் கருத்தை மறுத்துள்ளார். நரேந்திர மோடியே 2029 வரை பிரதமராக நீடிப்பார் என்ற அவர் தெரிவித்துள்ளார்.
மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறை கிடைக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை!
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் மோடி:
ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குச் சென்றார். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த இரண்டாவது பிரதமர் மோடி. அடல் பிஹாரி வாஜ்பாய் 2000ஆம் ஆண்டில் பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வானபோது அங்கு சென்றிருந்தார்.
மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மாதவ்ராவ் கோல்வால்கரின் பெயரில் இயங்கும் மாதவ் நேத்ராலயா கண் மருத்துவமனையின் புதிய விரிவாக்கக் கட்டிடத்திற்கு மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம் என்று புகழாரம் சூட்டினார். அதன் இலட்சியங்களும் கொள்கைகளும் தேசிய உணர்வைப் பாதுகாக்கின்றன எனவும் குறிப்பிட்டார்.
ஓய்வு பெறுகிறாரா மோடி?
வரும் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிறது. பாஜகவில் 75 வயதான மூத்த தலைவர்கள் எல்லா பதவிகளில் இருந்தும் விலகிவிடுவது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த வகையில்தான் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பதவிகளிலிருந்து ஒதுங்கினார். இவ்வாறு ஓய்வு பெற்ற வயதான தலைவர்கள் பாஜகவின் வழிகாட்டுதல் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு முக்கிய ஆலோசனைகளைக் கூறுவார்கள்.
தடுப்பூசி மைத்ரி: மீண்டும் பிரதமர் மோடியைப் பாராட்டிய சசி தரூர்!