நீதி புறந்தள்ளப்பட்டால் அயோத்தி மகாபாரதத்துக்கு இட்டுச் செல்லும்: மோகன் பகவத் எச்சரிக்கை!

By vinoth kumarFirst Published Sep 21, 2018, 4:17 PM IST
Highlights

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்தில் நீதி புறக்கணிக்கப்பட்டால், மகாபாரதம் நடப்பதை நோக்கி நகரும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்தில் நீதி புறக்கணிக்கப்பட்டால், மகாபாரதம் நடப்பதை நோக்கி நகரும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக இந்தி மொழியில் இரு நூல்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. அதில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: அகங்காரம், சுயவிருப்பம் காரணமாக, உண்மையும், நீதியும் புறக்கணி்க்கப்பட்டபோதெல்லாம் அயோத்தியில் மகாபாரதம் நடந்திருக்கிறது. இது நடக்கக்கூடாது, ஆனால், நடக்கிறது. இதை யார் தவிர்ப்பது. நீதியையும், உண்மையையும் புறந்தள்ளுவது என்பது, பிரச்சினைகளயும், தொந்தரவுகளையும் வரவேற்பது போன்றதாகும். அரசியல் நலனுக்காக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துதல் என்பது இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படக் காரணமாகிறது. 

பொய்களையும், அநீதியையும் நோக்கி நாம் நகர்ந்தால், அது வன்முறைக்கு இட்டுச் செல்லும். அஹிம்சையும், உண்மையும், நீதியும் வேண்டும். நாம் உண்மையை எதிர்கொள்வோம், விரைவில் நமக்கு நீதி கிடைக்கும், தாமதம் வேலை செய்யாது. ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. ராமஜென்மபூமி இயக்கத்தாருக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே பேச்சு நடக்கிறது. இந்த விஷத்தில் உண்யையும், கருத்தொற்றுமையும் ஏற்படுவது அவசியம் எனத் தெரிவித்தார்.

click me!