நெருங்கி வரும் ஆபத்து... தயே புயலால் மக்கள் பீதி!

Published : Sep 21, 2018, 02:14 PM IST
நெருங்கி வரும் ஆபத்து... தயே புயலால் மக்கள் பீதி!

சுருக்கம்

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள தயே புயல், ஒடிசாவின் வடக்கை நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாற வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள தயே புயல், ஒடிசாவின் வடக்கை நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாற வாய்ப்புள்ளது. இதனால், ஒடிசாவுக்கு பெரும் ஆபத்து வரலாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள தயே புயல் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 

பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக மல்கன்கிரி மாவட்டம் மிக கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் வலுவிழக்கும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

ஏற்கனவே பெய்த தொடர் மழையால், பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதைதொடர்ந்து, மழை மேலும் தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொலப் அணையில் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதால், 2 மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பொதுமக்கள் கடும் பீதியுடன் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
அவள் நரகத்துக்கே போகட்டும்.. நிதிஷ் குமாரின் செயலுக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர்!