பூச்சிகளுடன் கேக் விற்பனை: பிரபல ஹோட்டலுக்கு சென்ற வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி

By thenmozhi gFirst Published Sep 21, 2018, 1:52 PM IST
Highlights

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐகேஇஏ ஹோட்டலில் விற்பனையான கேக்கில் பூச்சிகள் இருந்ததுகண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐகேஇஏ ஹோட்டலில் விற்பனையான கேக்கில் பூச்சிகள் இருந்ததுகண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த இருவாரங்களுக்கு முன் இதே ஐகேஇஏ ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பூச்சி இருந்த நிலையில், இப்போது கேக்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ஹைதராபத்தில் பிரபல ஐகேஇஏ நிறுவனத்தின் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்ட் கடந்த மாதம்தான் புதிதாகத் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி கிஷோர் என்ற வாடிக்கையாளர் இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வந்து சாக்லேட் கேக் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அந்த கேக்கை சாப்பிட முற்பட்டபோது அதில் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்சி அடைந்தார்.

பின்னர் அந்த கேக்குக்கு பில் பெற்றுக்கொண்ட கிஷோர் , அந்த கேக் குறித்து வீடியோ எடுத்துக்கொண்டார். பின்னர் ஹைதாராபாத் போலீஸாருக்கும், ஹைதராபாத் நகராட்சி அமைப்புக்கும் புகார் தெரிவித்தார். இதையடுத்து, ஹைதாராபாத் நகராட்சி ஐகேஇஏ நிறுவன ரெஸ்டாரண்டுக்கு ரூ.5 ஆயிரம் அபாரதம் விதித்தது. 

இது குறித்து ஐகேஇஏ ரெஸ்ட்ராண்ட் வெளியிட்ட அறிவிப்பில், ஹைதராபாத்தில் உள்ள எங்களின் ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கில் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் இதே ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பிரியாணியில் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபத் நகராட்சி நிர்வாகம் ரூ.11,500 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐஇகேஏ ரெஸ்டாரண்ட் தொடங்கியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!