ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும்... அமித் ஷா ஆவேசம்!

By vinoth kumarFirst Published Sep 21, 2018, 10:22 AM IST
Highlights

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி, நமது கலாச்சாரத்துக்கு கிடைக்கும் வெற்றியாக அமையும் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி, நமது கலாச்சாரத்துக்கு கிடைக்கும் வெற்றியாக அமையும் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக இந்தி மொழியில் இரு நூல்கள் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது.

 

அதில் பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: நமது இந்து சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். சுதந்திரத்துக்குப் பின் ராம ஜென் பூமி இயக்கம் நமது நாட்டின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதிகமாக பேச இயலாது. 

ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையும் விருப்பமும் வெற்றி பெற வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கான கோரிக்கை சரியான திசையில் செல்கிறது. அயோத்தில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட 600 ஆண்டு காலத்தில் இருந்து அதற்கான போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி நமது சமூகத்துககு கிடைக்கும் வெற்றியாகும் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளிப்பது ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அயோத்தியில்  ராமர் கோயில்கட்டும் விவகாரம் தொடர்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேசிவருவது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 

அந்த கட்சியி்ன் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு, அல்லது அந்த அமைப்பில் உள்ளவர்களின் மரபணுவை மாற்ற முடியாது. தேர்தல் வரும்போதுதான் அயோத்தியில்  ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை கையில் எடுப்பார்கள். கடந்த 1986 முதல் 2018-ம் ஆண்டு வரை பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராமர் கோயில் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை எப்போது வெளியிட்டார்கள் என்ற தேதியை ஆய்வு செய்தால், அவை அனைத்தும் தேர்தலுக்கு அருகேதான் இருக்கும்.

இந்திய அரசியலமைப்புச்சட்டம் 370 பிரிவு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது ஆகியவற்றில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மாறவில்லை. அதேசமயம் 377 சட்டப்பிரிவு நிலைப்பாடு மட்டும் மாறிவிட்டது எனத் தெரிவித்தார்.

click me!