Rahul Gandhi Yatra: ஆர்எஸ்எஸ்,பாஜக வெறுப்பை பரப்புகின்றன:ராகுல் காந்தி தாக்கு!டெல்லி வந்த பாரத் ஜோடோ யாத்திரை

By Pothy RajFirst Published Dec 24, 2022, 9:38 AM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லிக்குள் நுழைந்தது. பதார்பூர் எல்லையில் ராகுல் காந்திக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் இனிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லிக்குள் நுழைந்தது. பதார்பூர் எல்லையில் ராகுல் காந்திக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் இனிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மக்களிடையே வெறுப்பை பரப்புகிறார்கள் இதை அனுமதிக்கக்கூடாது என ராகுல்காந்தி காட்டமாகத் தெரிவித்தார்

Nasal Vaccine:Bharat Biotechக்கின் ஊசியில்லா, மூக்குவழி கொரோனா தடுப்பூசி இன்று அறிமுகம்: யார் பயன்படுத்தலாம்?

ஹரியானாவில் நடைபயணத்தை முடித்து, டெல்லிக்குள் வந்த ராகுல் காந்தியை, டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள், மாநிலத் தலைவர் அனில் சவுத்ரி ஆகியோர் பதார்பூர் எல்லையில் வரவேற்றனர். ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா, சக்திசின் கோகில்,  ஆகியோர் ராகுலுடன் வந்திருந்தன்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பணவீக்கம், வேலையின்மை, வெறுப்பை நீக்குங்கள். இந்தியாவின் இந்தக் குரலைத் தாங்கி, அந்த ராஜாவை வீழ்த்த டெல்லிக்குள் வந்திருக்கிறோம். எங்களுடன் இணைந்து குரலை உயர்த்துங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை இன்றுடன் 108வது நாளை எட்டியுள்ளது. டெல்லிக்குள் வந்துள்ள ராகுல் காந்தி யாத்திரை 11 மணிஅளவில் ஆஷ்ரம் சவுக் பகுதியில் ஓய்வெடுத்து பின்னர் பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி, மதுரா சாலை, இந்தியா கேட், ஐடிஓ சென்று, செங்கோட்டை அருகே ஓய்வெடுப்பார்கள்.

அதன்பின் 9 நாட்கள் ஓய்வுக்குப்பின், மீண்டும்யாத்திரை டெல்லியில் இருந்து 2023, ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஹரியானா , உத்தரப்பிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் சென்று நிறைவடையும்

 

enters Delhi pic.twitter.com/9mJQeWNsCN

— Supriya Bhardwaj (@Supriya23bh)

டெல்லி எல்லையில் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “ ஆர்எஸ்எஸ், பாஜக மக்களிடையே வெறுப்பை பரப்புகிறார்கள், விதைக்கிறார்கள், நாங்கள் அன்பை பரப்புகிறோம், மக்களை ஒருங்கிணைக்கிறோம். இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ஒரே இந்துஸ்தான், அன்பு மட்டுமே இருக்கிறது. எந்தவிதமான சாதி, மதம், இனம், பணக்காரர், ஏழை என யாரையும் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை வாரி அனைத்துக் கொள்வோம். 

டெல்லியில் நாளை ராகுல் காந்தி யாத்திரை… கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிப்பு!!

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அச்சத்தை மக்களிடையே பரப்புகின்றன. ஒவ்வொருவரும் அச்சத்துடன் வாழவேண்டும் என விரும்புகிறார்கள், அந்த அச்சத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அச்சம் இல்லாவிட்டால், அது வெறுப்பாக மாறாது. நாங்கள் அன்பை மட்டுமே பரப்புகிறோம். பாஜக, ஆர்எஸ்எஸ் எதையும் செய்யவில்லை, வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்கள். அன்பு மூலம் மக்களை ஒருங்கிணைக்கவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது

நான் சில நாட்களுக்கு முன் கூறியதைப் போல, வெறுப்புச்சந்தையில், நாங்கள் அன்புக் கடை விரிப்போம். ஒவ்வொரு இந்தியரையும் அன்பு எனும் சிறிய கடையை உருவாக்க வேண்டும். இந்த யாத்திரையில் வெறுப்பை அறவை பார்க்க முடியாது.ஒருசிலர் மட்டுமே வெறுப்பை பரப்புகிறார்கள் பெரும்பாலான இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறார்கள்.

Year Ender 2022: பாஜக சிம்மசொப்பனம்! 2022ம் ஆண்டு தேர்தல்கள் ஒரு பார்வை

கன்னியாகுமரியில் இருந்து நடந்து வருகிறேன், மக்களிடம் அன்பை மட்டுமே பார்க்கிறேன், வெறுப்பைப் பார்க்கவில்லை.அதைத்தான் ஊடகங்களும் காண்பித்தன. 

வேலையின்மை, விலைவாசி உயர்வு, அச்சம், வெறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான நடைபயணம், இந்தியாவை யாரும் கூறுபோட அனுமதிக்கமாட்டோம். தொடர்ந்து போரிடுவோம். 3 ஆயிரம் கி.மீ நடந்தபின்பும் நான் சோர்வடையவில்லை, ஏனென்றால், நீங்கள், அளித்த அன்பு, உற்சாகம்தான் காரணம். ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியா நமக்கு உதவியுள்ளது அதை மறக்கக்கூடாது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
 

click me!