இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி! சவுதியில் மரண தண்டனை கைதியை மீட்க திரண்ட ரூ.34 கோடி நிதி!

By SG Balan  |  First Published Apr 13, 2024, 9:01 PM IST

கடந்த வாரம் 'சேவ் அப்துல் ரஹிம்' முயற்சிக்கு ரூ.34 கோடிக்கும் அதிகாமகவே நிதி வந்துவிட்டது. இதனார், அப்துல் ரஹீம் விரைவில் விடுதலை பெற்று நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. "18 ஆண்டுகளுக்குப் பிறகு என மகனை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா தெரிவிக்கிறார்.


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற இந்தியரை மீட்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி. ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அப்துல் ரஹீம், 2006ஆம் ஆண்டு தன் 20 வயதில் சவுதி அரேபியாவில் வேலைக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

Latest Videos

undefined

வேலைக்குச் சேர்ந்த ஓராண்டிற்குள் அவர் பணிபுரிந்த வீட்டுக் குடும்பத்தினருடன் அப்துல் ரஹீமுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனுக்குப் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவி துண்டிக்கப்பட்டது. இதில், அந்தச் சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அப்துல் ரஹீம் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படத்து. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, மாற்றுத் திறனாளி சிறுவனைக் கொலை செய்ததாக மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மனைவியைக் கொன்ற இந்திய இளைஞர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 கோடி பரிசு: FBI அறிவிப்பு

இந்நிலையில் அச்சிறுவனின் மரணத்துக்கு இழப்பீடாக இந்திய மதிப்பில் ரூ.34 கோடி பணம் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெற்று மரண தண்டனையை நிறுத்த சிறுவனின் குடும்பத்தினர் சம்மதித்தனர். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்தால் அப்துல் ரஹீம் விடுதலையாகும் வாய்ப்பு கிடைக்கும்.

இதனால், அவருக்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினர். ஓர் அமைப்பைத் தொடங்கி, சிறுவனின் மரணம் தற்செயலாக நடந்தது என்றும் வேண்டுமென்றே திரித்து அப்துல் ரஹீம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்றும் எடுத்துக்கூறி நிதி திரட்டத் தொடங்கினார்கள்.

'சேவ் அப்துல் ரஹிம்' என் மொபைல் அப்ளிகேஷனையும் உருவாக்கினர். சவுதி அரேபியாவிலேயே இருக்கும் அப்துல் ரஹீமின் நண்பர்களும் நிதி திரட்ட உதவினர். வெளிநாடுவாழ் தொழிலதிபர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினும் நிதியுதவி செய்தனர்.

கடந்த வாரம் 'சேவ் அப்துல் ரஹிம்' முயற்சிக்கு ரூ.34 கோடிக்கும் அதிகாமகவே நிதி வந்துவிட்டது. இதனார், அப்துல் ரஹீம் விரைவில் விடுதலை பெற்று நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. "18 ஆண்டுகளுக்குப் பிறகு என மகனை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா தெரிவிக்கிறார்.

அண்மையில் கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ் அப்துல் ரஹீம் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. அரசியல், மதங்களை கடந்து ரஹீமின் விடுதலைக்காக மக்கள் பங்களித்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு ஆசியாவில் அதிகரிக்கும் பதட்ட நிலை.. ஏர் இந்தியா எடுத்த திடீர் முடிவு - என்ன அது? ஏன்? முழு விவரம்!

click me!