இந்திய கடற்படையில் தற்போது 4 உதவி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 கப்பல்கள் தயாரிக்க மத்திய அரசு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்திய கடற்படைக்கு 5 உதவி போர்க்கப்பல்களை வாங்க ரூ.19,000 கோடிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த போர்க்கப்பல்கள் உள்நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட உள்ளன.
இந்தியக் கடற்படையில் போர்க்கப்பல்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவி புரியும் வகையில் உதவி போர்க்கப்பல்கள் செயல்படும். விசாகப்பட்டினத்தில் உள்ள எச்.எஸ்.எல். (HSL) நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல்கள் தயாரிக்கப்படும்.
இந்த உதவி போர்க்கப்பல்களில் எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகளை தகர்க்கும் அதிநவீன ஏவுகணைகள், அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்த 8 ஆண்டுகளுக்குள் இந்தக் கப்பல்கள் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நிறைமாத கர்ப்பிணியைப் பெத்தவங்களே கொன்ற கொடுமை! பொய் சாட்சி சொல்ல மறுத்ததால் நடந்த வெறிச்செயல்!
உதவி போர்க்கப்பல்கள் ஒவ்வொன்றும் 44,000 டன் எடை கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கப்பல் வீதம் கடற்படையிடம் வழங்கப்படும்.
போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், வெடி மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் வீரர்களுக்கான உணவுப் பொருட்கள், குடிநீர் ஆகியவற்றைக் கொண்டு செல்ல உதவி போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படும். இந்த வேலைகளை உதவி கப்பல்கள் செய்துவிடுவதால், போர்க்கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமல் நீண்ட காலம் கடலில் முகாமிட முடியும்.
நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
தற்போது இந்திய கடற்படையில் நான்கு பழைய உதவி போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ளன. பழமையான உதவி போர்க்கப்பல் 30 ஆண்டுகளாக பணியில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, கடற்படையிடம் தற்போது சுமார் 130 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 230 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளன.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1! செப். முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!