
புதுச்சேரியில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜெகன்.. கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அங்குள்ள குருமாம்பேட் பகுதியில் ஜெகன் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜெகனை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை மடக்கி அரிவாளால் வெட்ட முற்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகன் வாகனத்தில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்றார். இருப்பினும் தொடர்ந்து விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் ஜெகனை சரமாரியாக வெட்டினர்.
இத்தாக்குதலினால் தலையில் பலத்த காயமடைந்த ஜெகன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.