நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை…இப்படி எல்லாமா செய்வாங்க..பெற்றோர்கள் கதறல்..

 
Published : May 08, 2017, 06:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை…இப்படி எல்லாமா செய்வாங்க..பெற்றோர்கள் கதறல்..

சுருக்கம்

NEET exam in Kerala

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை…இப்படி எல்லாமா செய்வாங்க..பெற்றோர்கள் கதறல்..

கேரள மாநிலம் கண்ணூரில்  நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்றச் சொல்லி அதிகாரிகள் சோதனையிட்டதால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி எல்லாமா செய்வாங்க என கதறிய பெற்றோர்கள், இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

மருத்துவ பட்டப்பில் சேர நாடு முழுவதும் நீட் எனப்படும் எழுத்து தேர்வு இந்தியாவில் 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

‘ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற அரை கை உடை, மெல்லிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்ற சிறப்பு அலங்கார ஆடைகளை அணிய கூடாது என்றும்  சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

புடவை கட்டி வர் பெண்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள் தங்கள் துப்பாட்டாவை பெற்றோர்களிடமோ அல்லது தேர்வு மையத்திற்கு வெளியிலோ விட்டுச் சென்றனர். முழுக்கை சட்டை அணிந்ழ வந்த மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் தங்கள் முழுக்கை சட்டைகளை வெட்டிக் கொண்டு உள்ளே சென்ற அவலமும் நடைபெற்றது.

இந்த சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடயே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.

இதன் உச்சகட்டமாக கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தேர்வு மையத்தில் ஒரு மொணவி ஒருவரின் உள்ளாடைகளை கழற்றி அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த அவமானம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தாக அந்த மாணவியின் தாயார் தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!