
பாட்னாவில் நீட் தேர்வு வினாத்தாளை லீக் செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2, 204 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது.
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், துண்டு சீட்டுகள், புத்தகம், பவுச், கால்குலேட்டர், செல்போன், தொப்பி, கைப்பை உள்ளிட்ட எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும், வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்டவற்றையும் எடுத்து செல்லகூடாது என தடை செய்யப்பட்டது.
தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.
அரை கை உடை, மெல்லிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்றவையும் தடை செய்யப்பட்டன.
மாணவர்கள் அணிந்து வந்த முழு கை சட்டையை கிழித்து அரை கை சட்டையை வைத்து தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் வாரிக்கொண்டு வந்த தலைமுடியை கூட விட்டு வைக்கவில்லை. சோதனை என்ற பெயரில் அவிழ்த்து கலைத்து விட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாட்னாவில் நீட் தேர்வு வினாத்தாளை லீக் செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.