லஞ்சம் வாங்கினாரா அரவிந்த் கெஜ்ரிவால்? அமைச்சரை நீக்கியதால் சிக்கல்…

 
Published : May 08, 2017, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
லஞ்சம் வாங்கினாரா அரவிந்த் கெஜ்ரிவால்? அமைச்சரை நீக்கியதால் சிக்கல்…

சுருக்கம்

Aravind kejriwal bribe notice

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது அமைச்சரவையில்  அங்கம் வகிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்,'' என,பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர், கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையிலிருந்து திரு. குமார் விஷ்வாஸ் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து, அவருடன் திரு. கெஜ்ரிவால் சமரசம் மேற்கொண்டார். உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியை தொடர்ந்து, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கெஜ்ரிவால் மேற்கொண்ட இந்த சமரசத்தால் நெருக்கடியிலிருந்து ஆம் ஆத்மி அரசு மீண்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், டெல்லியின் நீர்வளத்துறை கபில் மிஷ்ராவை, கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்துள்ளார். 

பல இடங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நீக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஆனால், குடிநீர் விநியோகத்தில் நிகழ்ந்த 400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் மீது புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த புகார் மீது நிர்வாகம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், ஊழல் தடுப்பு பிரிவு தலைவரிடம் பல முக்கிய புள்ளிகள் மீது புகார் அளிக்க இருந்ததாகவும், இந்த நேரத்தில் தான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கபில் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து, இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன், என குற்றம்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கெஜ்ரிவால் மீதான் குற்றச்சாட்டு தனக்கு பெரும்  வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!