ரூபா தனது அந்தரங்கப் படங்களை வெளியிட்டது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என ரோஹிணி சிந்தூர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருக்கிறார். இவர் மைசூர் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ஓர் அரசு நிலம் தொடர்பாக இவருக்கு எம்.எல்.ஏ சா.ரா. மகேஷ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிந்தூரி அரசுக் கட்டிடத்தில் நீச்சல் குளம் கட்டியது விதிமுறைகளை மீறிய செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எம்.எல்.ஏ சா.ரா. மகேஷ், இதுபற்றி கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரோகினி எம்எல்ஏ சா.ரா. மகேஷை சந்தித்து சமாதானம் செய்தார் என்றும் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் ஆகியோர் உதவினர் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபா நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மீது 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், ரோகினி சிந்தூரி தன் அந்தரங்கப் படங்களை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Chandrayaan-3 : ISRO: 'சந்திரயான்-3' ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம்: இஸ்ரோ நம்பிக்கை
விவிஐபி பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் ஜாக்கெட்… வெளியிட்டது டிசிஎல் நிறுவனம்!!
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ரூபா, “ரோகினி எம்எல்ஏ சா.ரா.மகேஷை சந்தித்தார் என்ற செய்தியைப் பார்த்தேன். இது சமரசச் சந்திப்பு என்று சொல்லப்படுகிறது. ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்று புரியவில்லை. அதற்கு சட்டத்தில் ஏதாவது வழி உள்ளதா? ரோகினிக்கு ஏதேனும் குறை இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ரூபாவுக்கு பதிலளித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, “பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கு மனநோய் ஏற்பட்டுவது மிகவும் ஆபத்தானது. ரூபா என்மீது தவறான அவதூறு பிரசாரத்தைப் பரப்புகிறார். அவர் பணியாற்றிய எல்லா இடத்திலும் இதேபோலச் செய்துள்ளார். ரூபா பகிர்ந்த படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்தான். என் பெயரைக் கெடுப்பதற்காகவே இப்படிச் செய்கிறார். ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்டவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சிறையில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது நினைவூட்டத்தக்கது.
இளம் ஆர்கன் டோனர் என்ற பெருமையை பெற்ற 17 வயது சிறுமி... தந்தைக்கு கல்லீரல் தானம்!!