
மத்தியப் பிரதேச கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுக்குக் கிடைத்த கற்களை குலதெய்வம் என்று வணங்கிய நிலையில், அவை புதைபடிவ டைனோசர் முட்டைகள் என்பதைக் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மத்திய பிரதேச மாநிலம் தார்ஸ் பட்லியா என்ற கிராமத்தில் போது சில உருண்டை வடிவ கற்கள் கிடைத்துள்ளது.
அதனை தங்கள் குலதெய்வம் என்று கிராம மக்கள் வணங்கி வந்துள்ளது. தங்கள் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களிலிருந்து குலதெய்வம் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையின்படி, வழிபட்டு வந்துள்ளனர். இதே போல் அந்த கிராமத்தை சுற்றி பல கிராமங்களிலும் சில உருண்டை வடிவ பாறை போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து லக்னோவை சேர்ந்த அறிவியல் நிபுணர்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தான் து, அந்தக் கற்கள் மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் என்று கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
"நாங்கள் எங்கள் குலதெய்வத்திற்உ (பிலட் பாபா) தேங்காய்களை சமர்ப்பித்து பூஜை செய்தோம். கிராமவாசிகளும் மழையின் போது ஆடுகளை வழங்குவார்கள்" என்று பட்லியா கிராமத்தில் வசிக்கும் வெஸ்டா மண்டலோய் கூறினார்.
வன அதிகாரி (டிஎஃப்ஓ) ஏஎஸ் சோலங்கி இதுகுறித்து பேசிய போது "எங்களிடம் ஒரு டைனோசர் பூங்கா உள்ளது, அது 2011 இல் கட்டப்பட்டது. அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பல முறை இதுபோன்ற புதைபடிவங்களைக் கண்டுபிடித்து அவற்றை வணங்கத் தொடங்குகிறார்கள்," என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் திறப்பு விழா.. தரிசன நேரம்.. ஆரத்தி நேரம் எப்போது? எப்படி முன்பதிவு செய்வது?
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தின் பாக் பகுதியில் புதைபடிவ சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு மையம் உள்ளது. டைனோசர் புதைபடிவ தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் இது பல்வேறு பழங்கால புதைபடிவங்களை சேமிக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கில் நல்ல எண்ணிக்கையிலான டைனோசர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் மற்றும் அவற்றின் ஆயிரக்கணக்கான இனங்கள் பூமியில் வாழ்ந்து வந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பூமி மீது மிகப்பெரிய விண்கல் மோதியதால் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனங்கள் அழிந்துவிட்டன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.