மத்தியப் பிரதேசத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நபர் திடீரென தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் விஜய் நகரைச் சேர்ந்த 55 வயதான பிரதீப் ரகுவன்ஷி அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்திவந்தார். இவர் வியாழக்கிழமை இந்தூரில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சிக்காகச் சென்றுள்ளார்.
உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனிடையே ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த பிரதீப் ரகுவன்ஷி எதிர்பாராத விதமாக கீழே விழும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
ஆன்லைனில் பிரியாணி வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண் பரிதாப பலி
के प्रसिद्ध होटल व्यवसायी की जिम में अचानक मौत,वर्कआउट करने से पहले ही जमीन पर गिरे,नजदीकी अस्पताल में चिकित्सकों ने किया मृत घोषित,हृदयघात से मौत की आशंका,बेसुध होकर जमीन पर गिरने की घटना सीसीटीवी में कैद pic.twitter.com/ZLOkZS7qpp
— Vikas Singh Chauhan (@vikassingh218)பத்து நிமிட பயிற்சிக்குப் பின் பிரதீப் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார் என்று உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர் தெரிவிக்கிறார். அவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே இதயத்தில் கோளாறு இருந்தது என்று அவரது உறவினர் ராஜேந்திர ரத்தோர் கூறியுள்ளார்.
இதய நோய் உள்ளவர்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை இதயக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டும்.