கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோட்டு அருகே உள்ள பெரும்பலா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அஞ்சு ஶ்ரீபார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உள்ளுரைச் சேர்ந்த ரொமான்சியா என்ற உணவகத்தில் ஆன்லைன் மூலம் குழிமந்தி பிரியாணி வாங்கிச் சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட அன்றே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“சனிக்கிழமை அந்தப் பெண் உயிரிழந்தார். அவரது பெற்றோர் புகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இளம்பெண் அஞ்சு ஶ்ரீபார்வதி மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிவ லிங்கத்தில் விரிசல்! ஜோஷிமத் நிலச்சரிவின் எதிரொலி!
“உணவுப் பாதுகாப்பு ஆணையர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளோம். மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம்” என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார். விஷத்தன்மை கொண்ட உணவை அளித்து உறுதியானால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின் உடல்நலம் குன்றி உயிரிழ்ந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.